

ஐ.பி.எல். 2026 சீசன் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வரை 9 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
மதியம் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
தொடர்ந்து, இன்று இரவு 7.30 நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி.- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதன் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதன்மூலம், ஆர்சிபி அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.
முதலாவதாக, பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இதில், 4.3 ஓவரில் 28 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.
அன்ஷூல் கம்போஜ் வீசிய பந்தில் தூபேவிடம் கேட்ச் கொடுத்து விராட் கோலி அவுட்டானார்.
தற்போது, 9 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணி விளையாடி வந்தது.
இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு ஆர்சிபி அணி 250 ரன்களை குவித்துள்ளது.
ஆர்சிபி அணி தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் 70 ரன்களும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களும்,ரஜத் பட்டிதர் 48 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில், 251 என்கிற இமாலய இலக்குடன் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.