

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இருப்பினும், போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நடந்த ஒரு சம்பவம் சிஎஸ்கே ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. போட்டி முடிந்து வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி உரையாடிக்கொண்டிருந்த போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரவீந்திர ஜடேஜா, சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கலீல் அகமதுவின் சட்டையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோவை ஜடேஜா முத்தமிட்டார்.
கடந்த சீசன் வரை சிஎஸ்கே அணியின் தூணாக விளங்கிய ஜடேஜா, இந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக நடந்த மாற்றங்களால் ராஜஸ்தான் அணிக்கு மாறினார்.
இருந்தபோதிலும், சென்னை அணி மற்றும் அந்த லோகோ மீதான தனது தீராத அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக அவர் இவ்வாறு செய்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், "மஞ்சள் உடையை மாற்றினாலும், இதயம் இன்னும் மஞ்சள் தான்" என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.