

ஐபிஎல் 2018 தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.
கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இறுதி போட்டி முடிவடைந்த பின் வீரர்கள் மைதானத்தில் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது டோனி மற்றும் பிராவோ இடையே சிறிய போட்டி நடைபெற்றது. இருவரும் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு மூன்று ரன்கள் ஓட முடிவு எடுத்தனர். யார் முதலில் வருவார்கள் என இருவருக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இதனை மற்றவர்கள் கண்டு ரசித்தனர்.