IPL 2026 | சேப்பாக்கத்தில் 6 தோல்விகளுக்குப் பிறகு வெற்றியை ருசித்த சிஎஸ்கே..!

சஞ்சு சாம்சன் சதம், ஓவர்டன் பந்து வீச்சால் டெல்லி அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
IPL 2026 | சேப்பாக்கத்தில் 6 தோல்விகளுக்குப் பிறகு வெற்றியை ருசித்த சிஎஸ்கே..!
Published on

ஐபிஎல் கிரிக்கெட்டில் சொந்த மைதானத்தில் விளையாடுவது அந்தந்த அணிகளுக்கு சாதமாக இருக்கும் என்பார்கள். ஆனால், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதன் சொந்த மைதானமான சேப்பாக்கம் அவ்வளவு சாதகமாக அமையவில்லை.

நேற்று டெல்லிக்கு எதிராக சேப்பாக்கத்தில் விளையாடிய போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ந்து 6 தோல்விகளை சந்தித்த பிறகு முதல் வெற்றியை ருசித்துள்ளது.

2022-ம் ஆண்டு சீசனில் தொடர்ந்து 4 தோல்விக்குப் பின் முதல் வெற்றியை பெற்றிருந்தது சிஎஸ்கே. தற்போது 3 தோல்விக்குப் பின் வெற்றி பெற்றுள்ளது.

சேப்பாக்கத்தில் டெல்லிக்கு எதிராக 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் தோல்வியை தழுவியுள்ளது.

நேற்று டெல்லி அணியை ஆல்-அவுட் ஆக்கியது. இதன் மூலம் 26 முறை எதிரணியை ஆல்அவுட் ஆக்கி 3-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 40 முறை எதிரணிகளை ஆல்அவுட் ஆக்கியுள்ளது. ஆர்சிபி 28 முறை எதிரணிகளை ஆல்-அவுட் ஆக்கியுள்ளது.

ஐபிஎல் அதிக முறை (31) ஆல்-அவுட் ஆகிய அணி என்ற மோசமான சாதனையை டெல்லி கேப்பிட்டல்ஸ் பதிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com