

ஐ.பி.எல். 2026-ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 18வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட, சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சஞ்சு சாம்சன் 52 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். ருதுராஜ் 18 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்தார். 7-வது ஓவரை அக்சர் படேல் பந்தில் அவுட் ஆகி வெளியேற ஆயுஷ் மாத்ரே களமிறங்கினார்.
ஆயுஷ் மாத்ரேவும் அரைசதம் கடந்து 59 ரன்னில் அவுட் ஆனார். இடையில் வந்த ஷிவம் துபே 10 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 56 பந்தில் 115 ரன்கள் அடிக்க சி.எஸ்.கே. 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
213 என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் இறங்கியது.
தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நிதானமாக ஆடி 41 ரன்கள் எடுத்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா காம்போஜ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார்.
அசுதோஷ் சர்மா 19 ரன்கள், சமீர் ரிஸ்வி 6 ரன்கள் எடுத்தனர். அக்சர் படேல் 1 ரன் எடுத்து அவுட் ஆனார்.
சிஎஸ்கேவின் அதிரடி பந்துவீச்சால் திணறிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் நடப்பு தொடரில் சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.