IPL 2026| டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது சிஎஸ்கே

ஆர்சிபி அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.
IPL 2026| டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது சிஎஸ்கே
Published on

ஐ.பி.எல். 2026 சீசன் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வரை 9 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

மதியம் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

தொடர்ந்து, இன்று இரவு 7.30 நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி.- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதன் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இதன்மூலம், ஆர்சிபி அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com