ஒருநாள் உலகக்கோப்பையை ஒட்டி IPL தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாட்டை கண்காணிக்க BCCI திட்டம்!

உலகக் கோப்பைக்​காக இந்​திய அணி​யின் 20 சாத்​தி​ய​மான வீரர்கள் ஏற்​கெ​னவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
INDIAN CRICKET TEAM
INDIAN CRICKET TEAM
Published on

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 3 ஐ.சி.சி. கோப்பையை வென்றது. 2024-ல் 20 ஓவர் உலக கோப்பை, 2025-ல் சாம்பி யன்ஸ் டிராபி, சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பை ஆகியவற்றை வென்றது.

உலக கோப்பை இலக்கு:

அடுத்து ஒருநாள் போட் டிக்கான உலக கோப்பை யை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. 50 ஓவருக்கான உலக கோப்பை போட்டி 2027-ம் ஆண்டு அக்​டோபர்​-நவம்பர் மாதங்களில் தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது.

கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983-ல் முதல் முறையாக உலக கோப்பையை ைகப்பற்றியது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் தோனி கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அதன் பிறகு இதுவரை சாம்பியன் பட்டம் பெறவில்லை. 2023-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.

20 வீரர்கள்:

2027-ல் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இப்போதே பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இன்​னும் ஒரு வருடம் உள்ள நிலை​யில் இந்த தொடருக்கான அணியை கட்​டமைக்​கும் முயற்​சி​யில் தேர்​வுக்​குழு​வினர் ஈடுபட்டு உள்​ளனர். அந்த வகையில் உலகக் கோப்பைக்​காக இந்​திய அணி​யின் 20 சாத்​தி​ய​மான வீரர்கள் ஏற்​கெ​னவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். போட்டி:

இவர்​களின் செயல் திறன்​களை வருகிற 28-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் போது அஜித் அகர்​கர் தலை​மையி​லான தேர்​வுக்​குழு​வினர் கூர்ந்து கவனிப்பார்கள் என்று பி.சி.சி.ஐ. வட்​டாரங்​கள் தெரிவித்துள்ளன.

தேர்​வுக்​குழு​வில் எஸ்​.எஸ்​.​தாஸ், ஆர்​.பி.சிங், அஜய் ராத்​ரா, பிரக்​யான் ஓஜா ஆகியோ​ரும் இடம் பெற்​றுள்​ளனர்.

தேர்​வுக் குழு உறுப்​பினர்​கள்:

ஐ.பி.எல். தொடரின் போது தேர்​வுக் குழு உறுப்​பினர்​கள் தங்களுக்கு ஒதுக்​கப்​பட்ட மைதானங்​களுக்கு நேரில் சென்று போட்​டிகளைக் கண்​காணிப்​பார்​கள் என்​றும், மற்ற போட்​டிகளை தொலைக்​காட்​சி​யின் வாயி​லாக கவனிப்​பார்​கள் என்​றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அஜித் அகர்​கர் மும்​பை​யில் வசித்து வரு​கிறார். இதனால் அவர் அங்கு நடை​பெறும் போட்​டிகளை நேரில் பார்​வை​யிடு​வார். எஸ்​.எஸ்​.​தாஸ் கொல்​கத்​தாவில் நடை​பெறும் போட்​டிகளை​யும், ஆர்​.பி.சிங், விஜய் ராத்ரா ஆகியோர் டெல்​லி​யில் நடை​பெறும் போட்​டிகளை​யும் பார்​வை​யிடுவார்கள். பெங்​களூரு, ஐதரா​பாத்​தில் நடை​பெறும் போட்​டிகளை ஓஜா பார்​வை​யிடுவார்.

இதுகுறித்து பி.சி.சி.ஐ. மூத்த அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “ஒவ்​வொரு தேர்​வாள​ரும் வாரத்​துக்கு குறைந்​தது ஒரு போட்​டியை​யா​வது நேரடி​யாக மைதானத்​துக்கு சென்று பார்க்க வேண்​டும் என்று திட்​ட​மிட்​டுள்​ளோம். இதன் மூலம் வாரத்​துக்கு 5 போட்டிகள் மைதானத்​தில் இருந்து நேரடி​யாகக் கண்​காணிக்​கப்​படும். மற்ற போட்​டிகளை அவர்​கள் வழக்​கம்​போலத் தொலைக்​காட்​சி​யின் வாயி​லாக​ கண்​காணிக்​க முடியும்’​ என்​றார்​.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com