IPL 2026 | ரபாடாவை முந்தி பர்பிள் கேப்பை கைப்பற்றினார் அன்ஷுல் கம்போஜ்

முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் எடுத்தது.
IPL 2026 | ரபாடாவை முந்தி பர்பிள் கேப்பை கைப்பற்றினார் அன்ஷுல் கம்போஜ்
Published on

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அணிகளுக்கு இடையிலான மோதல் ஒருபுறம் இருக்க, வீரர்களுக்கு இடையிலான தனிப்பட்ட சாதனைகளுக்கான போட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், அதிக விக்கெட் வீழ்த்தியோருக்கான பர்பிள் கேப் பட்டியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக புவனேஷ்வர் குமாரிடம் இருந்த பர்ப்பிள் கேப்பை நேற்று குஜராத் அணியின் ரபாடா தட்டிப் பறித்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக அவர் எடுத்த 2 விக்கெட்டுகளுடன், ரபாடா 18 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் அன்ஷுல் காம்போஜ் 19 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

ரபாடா 18, புவனேஷ்வர் குமார் 17, பிரின்ஸ் யாதவ் 16, இஷான் மலிங்கா 16 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com