RCB | பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியை தொடங்கிய விராட் கோலி- வீடியோ

ஐபிஎல் 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள விராட் கோலி, தனது பயிற்சியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியுள்ளார்.
விராட் கோலி
விராட் கோலி
Published on

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. தற்போது இவர் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் இல்லாத நேரத்தில் லண்டனில் வசித்து வருகிறது.

ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள விராட் கோலி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளார். இதற்கான வீடியோவை ஆர்.சி.பி. அணி வெளியிட்டுள்ளது.

கடந்த முறை ஆர்.சி.பி. சாம்பியன் பட்டம் வென்றது. இந்த முறை அதை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும். விராட் கோலி, ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்தே, ஆர்.சி.பி. அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com