

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 5-வது முறையாக வென்று சாதனை படைத்தது.
இந்த போட்டி முடிந்த பிறகு டோனியிடம் வீரர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது சிஎஸ்கே வீரரான தீபக் சாஹர் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்தார். உடனே டோனி உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது என்று விலகினார். அப்போது அருகில் இருந்தவரிடம் கேட்ச் பிடிக்க தெரியல இவனுக்கு எப்படி ஆட்டோகிராப் போட முடியும் என fun-ஆக டோனி பேசினார்.
முடிவில் தீபக் சாஹர் அணிந்திருந்த சிஎஸ்கே ஜெர்சியில் டோனி ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்றைய போட்டியில் சுப்மன் கில் கேட்சை தீபக் சாஹர் மிஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.