4வது டி20 போட்டி - இந்திய அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்..!

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிம்ரன் ஹெட்மயர் அரைசதம் கடந்து அசத்தினார்.
4வது டி20 போட்டி - இந்திய அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்..!
Published on

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய கைல் மேயர்ஸ் மற்றும் பிரான்டன் கிங் முறையே 7 பந்துகளில் 17 ரன்களையும், 16 பந்துகளில் 18 ரன்களையும் அடித்தனர். அடுத்து வந்த ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 29 பந்துகளில் இரண்டு சிக்சர், மூன்று பவுன்டரிகளுடன் 45 ரன்களை குவித்து சாஹல் பந்தில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மற்றும் ரோவ்மேன் பொவெல் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினர். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். இவர் 39 பந்துகளில் 61 ரன்களை குவித்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்களை குவித்துள்ளது.

இந்திய சார்பில் அர்தீப் சிங் மூன்று விக்கெட்களையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com