கடைசி டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய மகளிர் அணி

மந்தனா 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இறுதியில் அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷு 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசி டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய மகளிர் அணி
Published on

இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் உமா சேத்ரி களமிறங்கினர். இதில் உமா சேத்ரி 2-வது பந்திலேயே டக் அவுட் ஆனார்.

இதனையடுத்து ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் நடப்பு டி20 தொடரில் அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என 77 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து இணைந்த ராகவி பிஸ்ட் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷு அரைசதம் கடந்து அசத்தினர். அவர் 54 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களைக் குவித்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com