அவன் பேரே வரலாறு.. குஜராத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி செய்த சாதனைகள்!

44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து விராட் கோலி அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.
அவன் பேரே வரலாறு.. குஜராத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி செய்த சாதனைகள்!
Published on

ஐ.பி.எல்.தொடரின் 34 வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. அத்ன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 205 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது.

44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து விராட் கோலி அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். கோலியுடன் இணைந்து அதிரடி காட்டிய படிக்கல், வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.

இறுதியில் 23 ரன்களுடன் குருணால் பாண்டியாவும் அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார். எனவே 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை, ஆர்சிபி அணி 18.5 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்தது.

இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றிக்கு மூல கர்த்தாவாக அமைந்த விராட் கோலி தனிப்பட்ட முறையிலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.

அதன்படி, இந்த போட்டியில் விளையாடிதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையைப் கோலி பெற்றார்.

அதேபோல ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக (ஆர்சிபி) 300 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் கோலி இன்று படைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com