பாவம் அவரே confuse ஆகிட்டாரு.. வைரலாகும் டேவிட் வார்னர் வீடியோ

ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் அரை சதம் விளாசினார்.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாவம் அவரே confuse ஆகிட்டாரு.. வைரலாகும் டேவிட் வார்னர் வீடியோ
Published on

பிரிட்ஜ்டவுண்:

டி20 உலகக்கோப்பையில் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதியது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், வார்னர் - ஸ்டோய்னிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக வார்னர் அதிரடி காட்டாமல் நிதானமாக விளையாடினார். அவர் 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது எதிரணி பந்து வீச்சாளர் அவரது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக செயல்பட்டார். 

இதனால் சோகத்துடன் வெளியேறிய வார்னர் ஆஸ்திரேலிய அணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு செல்வது பதிலாக எதிரணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். உடனே அருகில் இருந்தவர்கள் கூறியவுடன் சுதாரித்து கொண்டு தங்களது டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com