லக்னோவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறாரா தோனி? - சி.எஸ்.கே தலைமை அதிகாரி விளக்கம்

நடப்பு ஐபிஎல் சீசனில் களமிறங்காமல் இருந்த தோனி, அடுத்த போட்டிக்கு லக்னோ செல்வதாக அறிவிப்பு
லக்னோவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறாரா தோனி? - சி.எஸ்.கே தலைமை அதிகாரி விளக்கம்
Published on

சென்னை அணி ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகளிலாவது சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி களமிறங்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுவரை நடந்துள்ள போட்டிகளில் ஆறு வெற்றி மற்றும் ஐந்து தோல்வியுடன் ஐந்தாம் இடத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி உள்ளது.

காலில் ஏற்பட்ட தசைபிடிப்பின் காரணமாக நடப்பாண்டு சீசனில் ஒரு போட்டியில் கூட களமிறங்காமல் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வில் இருந்துவந்தார்.

இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்வதற்காக ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு செல்ல உள்ளதாக சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை அணி ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு, மீதமுள்ள மூன்று போட்டிகளில் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com