ஆர்சிபி மைதானத்தில் தொடக்க விழா கிடையாது- வெளியான தகவல்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் 2026-ன் பிரம்மாண்ட தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்சிபி மைதானத்தில் தொடக்க விழா கிடையாது- வெளியான தகவல்
Published on

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நாளை மறுநாள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டிக்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் 2026-ன் பிரம்மாண்ட தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஆர்பிசி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த ஆண்டு தொடக்க விழாவை நடத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் 28-ல் தொடக்க விழா இல்லை என்றாலும், மே 31-ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது மிகப்பிரம்மாண்டமான நிறைவு விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் ஐபிஎல், இந்த முறை நேரடியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com