மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
australia
Published on

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில், முதல் அரையிறுதிப் போட்டி லண்டனில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனையான கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 30 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தனர். ஷெமைன் கேம்ப்பெல் 20 ரன் எடுத்தார்.

அடுத்து வந்தவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய தியேந்திர டாட்டின் 16 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர், சோபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 126 ரன்களை இலக்காகக் கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com