2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

குரு தன் வீட்டை தானே பார்ப்பதால் செய்யாத குற்றத்தினால் அனுபவித்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.
2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்
Published on

தனுசு

நிம்மதியான வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு ஐந்தில் உச்சம் பெறுகிறார். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும்.தெய்வப் பிரார்த்த னைகள் நிறைவேறும். பூர்வீகத்திற்கும் குல தெய்வ கோவி லுக்கும் சென்று வருவீர்கள். வியா பாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும். தொழிலில் முதலீடுகள் பல மடங்கு லாபத்தைத் தரும். குரு தன் வீட்டை தானே பார்ப்பதால் செய்யாத குற்றத்தினால் அனுபவித்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். திருமண முயற்சி கைகூடும். குரு அஷ்டம ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் முக்கியப் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது.ஆரோக்கியம் சீராகும். தமிழ் புத்தாண்டு அன்று சக்கரை பொங்கல் தானம் வழங்கவும்.

மகரம்

சாதகமான வாரம்.ராசிக்கு மூன்றாமிடமான உப ஜெய ஸ்தான அதிபதி குரு பகவான் 6,9ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். நினைவாற்றல் மேம்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆசை உண்டாகும்.

சிலருக்கு புதியதாக காதல் அரும்பும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும்.பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்பு மாரியாதை கூடும். மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும்.திருமணத் தடை அகலும்.தமிழ் புத்தாண்டு அன்று நல்லெண்ணெய் தானம் வழங்கவும்.

கும்பம்

புதிய திட்டங்களில் வெற்றி உண்டாகும் வாரம்.கும்ப ராசிக்கு சம சப்தம ஸ்தான அதிபதியான சூரியன் ராசிக்கு மூன்றில் உச்சம் பெறுகிறார். புதிய திட்டங்கள் மூலம் தொழிலை மேம்படுத்துவீர்கள். புதிய முயற்சியில் அதிக லாபம் பார்ப்பீர்கள். அரசாங்க ஊழியர்கள் சிறப்பாக பணி செய்து பலன் பெறுவார்கள்.உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். அரசியலில் ஈடுபட்டோருக்கு ராஜயோகம் தரும் காலமாகும். சிலர் நீண்ட காலமாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபடுவீர்கள்.

வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்‌. உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.கணவன்-மனைவி இருவரும் மனமொன்றி நடந்துகொள்வார்கள். குடும்பத்து டன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பல வகையில் பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். வாடகை வீட்டு தொல்லை அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பாக பெற்றோர்கள், உடன் பிறந்த வர்கள் மூலம் சிறு மன உளைச்சல் உண்டாகும். தமிழ் புத்தாண்டு அன்று பழங்கள் தானம் வழங்கவும்.

மீனம்

சுமாரன வாரம்.அஷ்டமாதிபதி சுக்கிரன் மற்றும் 6ம் அதிபதி சூரியன் ராசிக்கு 2ல் சேர்க்கை பெறுவதால் வெளிநாட்டு வருமானம் வரும் அல்லது வேற்று இனத்தவரின் உதவிகள் கிடைக்கும். தனவரவில் தடையில்லாத, தளர் வில்லாத வளர்ச்சி உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் இந்த வாரத்தில் கிடைத்துவிடும். ராசி அதிபதி குரு சாதகமாக இருப்பதால் அனைத்து இழப்புகளையும் ஈடு செய்யக் கூடிய நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். கடினமாக உழைப்பும் முயற்சியும் இருந்தால் இலக்கை, லட்சியத்தை அடைய முடியும்.

தாராள தன வரவால் குடும்பத்தில் சல சலப்பு நீங்கி கலகலப்பு கூடும்.திருணப் பேச்சு வார்தைகள் நல்ல முடி விற்கு வரும். சுகவீனத்தால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்துங்கள். அலட்சியமாக இருந்து வேலையை இழந்து விடாதீர்கள். கடன் பெற்றாவது சொந்த வீடு, வாகன யோகத்தை அடைவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. தமிழ் புத்தாண்டு அன்று மஞ்சள் நிற உணவு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com