

சிம்மம்
ஏற்றம் இறக்கம் நிறைந்த வாரம். ராசி அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சனி மற்றும் செவ்வாயுடன் சஞ்சரிக்கிறார். வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும். சிலரின் வாழ்க்கைத் துணை தொழிலுக்காக கடல்கடந்து செல்ல வாய்ப்பு உள்ளது. சில தம்பதிகள் தொழில் அல்லது வேலை நிமித்தமாக குறுகிய காலம் பிரிந்து வாழலாம். நீண்டகாலமாக உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவீர்கள்.
வெளி வட்டார செல்வாக்கை அதிகரிக்க ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். வீண் செலவால் மனச் சஞ்சலம் மனக் குழப்பம் உருவாகும். செல்வாக்கு, கவுரவம் போன்றவற்றில் ஏற்பட்ட பங்கம் நீங்கும். மண், மனை வாங்குவது, வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, புதிய வாகனம் வங்குவது என சுப விரயங்கள் ஏற்படும். தொழில் ஜீவனத்தில் எந்த குறையும் வராது. வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை அலட்சியமாக கையாளக்கூடாது.நவகிரக சூரியனை வழிபடவும்.
கன்னி
ஆரவாரமான வாரம். ராசிக்கு சூரியன் செவ்வாய் சனி பார்வை உள்ளது. என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை கூடும். உங்கள் செயல்கள் அனைத்திலும் தைரியமாக செயல்பட்டு வெற்றியடைவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரப் போட்டிகளை சமாளிக்கும் தைரியம் அதிகரிக்கும். சிலருக்கு நாடு மாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். பணி நிமித்தமாக சிலர் குடும்பத்தைப் பிரிந்து செல்லும் நிலையும் உண்டாகும்.
உடல் நலத்தில் சிறுசிறு குறைபாடு இருந்து கொண்டே இருக்கும். விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கும். வேலைப்பளு கூடினாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். சொத்துக்கள், அரைகுறையாக நின்ற பணிகள் முழுமையாக முடிவடையும். சுப காரியப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். சங்கடங்கள் விலகி நன்மைகள் அதிகரிக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பாகப்பிரிவினை சுமூகமாகும். நவகிரக புதபகவானை வழிபடவும்.
துலாம்
புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தன் வீட்டை தானே பார்க்கிறார். நல்ல சிந்தனை உண்டாகும். எண்ணிலடங்கா சுப பலன்கள் நடக்கவுள்ளது. வியாபாரம் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். தொழில் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். தாய் வழிச் சொத்தில் நிலவிய சங்கடங்கள் தீரும். தாயின் பூரண ஆசியும் அன்பும், அரவணைப்பும். கிடைக்கும்.
கல்வியில் ஏற்பட்ட மந்த நிலை நீங்கும். சொத்து வாங்குவது விற்பதில் இருந்த தடைகள் விலகும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். குல தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். மாணவர்களுக்கு கற்கும் ஆர்வம் கூடும். கற்ற கல்வி மூலம் நிறைந்த வருமானமும் திரண்ட சொத்துக்களும் சேரும். சகலகலா வல்லவர்களாக இருப்பீர்கள். உடல் நலக் குறைபாடு மருத்துவத்திற்கு கட்டுப்படும். அஷ்டலட்சுமி வழிபாட்டால் அதிகப்படியான நன்மைகள் வரும்.
விருச்சிகம்
மகிழ்ச்சியான வாரம். சுமார் 50 நாட்களுக்கு பிறகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறப்போகிறார். அதன் பிறகு நன்மைகள் நடக்க துவங்கும். அதுவரை அடுத்தவர் பேச்சைக் கேட்டு உங்களுடைய மூளையை குழப்பாமல் சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. மிகுதியான கோபம், பிடிவாதத்தை தவிர்த்தால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். ஜாதகர் பார்க்கும் தொழில் மூலம் புகழ், அந்தஸ்து, கவுரவம் கிடைக்கும்.
தடைபட்ட வேலை மாற்றம் இடப்பெயர்ச்சி வெகு விரைவில் கிடைத்துவிடும். மாணவர்கள் பல அறிய புதிய விசயங்களை கண்டுபிடிப்பார்கள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வார்கள். சிலர் ஒப்பந்தப் பணி முடிந்து தாயகம் திரும்புவார்கள். குடும்பத்தினர் உங்கள் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கணவன், மனைவி உறவில் நிலவிய பனிப்போர் விலகும். செவ்வாய்க்கிழமை பாலமுருகனை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406