

தனுசு
சுகபோக வாழ்க்கை உண்டாகும் வாரம். 11-ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு குரு மற்றும் சுக்ரன், செவ்வாய் பார்வை உள்ளது. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பும், அரவணைப்பும் கூடும். பதினாறு வகைச் செல்வங்களும் நிரம்பும். சிறிய உழைப்பில் நல்ல வருமானம் கிடைக்கும். அரசுத் துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் உண்டாகும்.
அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். லவுகீக விசயங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் சங்கடங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். 29.3.2026 அன்று நள்ளிரவு 2.38 மணிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்கில் நிதானம் தேவை. குடும்ப உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பங்குனி உத்திரம் அன்று சிவனுக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
மகரம்
கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் வாரம். ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சுக்ரன் நிற்பதால் ஆடம்பரமான சொத்துக்கள் சேரும். விவசாயம், ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பவர்களுக்கு சிறிய முயற்சியில் அதிக வருமானம் கிடைக்கும். உழைக்காத வருமானம் உண்டு. பயன்படுத்த முடியாமல் கிடந்த முன்னோர்களின் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். வாழ்க்கை முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
ஆழ்மன சிந்தனை பெருகும். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருகும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். 29.3.2026 அன்று நள்ளிரவு 2.38 முதல் 31.3.2026 அன்று இரவு 9.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு கடன் தொல்லை சர்ஜரி, வம்பு, வழக்கு வரலாம். முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக நிதானத்துடன் இருக்க வேண்டும். பங்குனி உத்திரம் அன்று பால் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
கும்பம்
அதிர்ஷ்டமான வாரம். ராசியில் உள்ள புதன் ராகுவிற்கு 2,11-ம் அதிபதி குருவின் 9ம் பார்வை உள்ளது. சொத்து இல்லாதவர்களுக்கு புதிய வீடு, வாகன யோகம் உண்டாகும். ராஜ யோகத்தை அனுபவிப்பீர்கள். உழைக்காத வருமானம் உண்டு. தொட்டது துலங்கும். பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோரும், பெற்றோர்களால் பிள்ளைகளும் பயன் பெறுவார்கள். வழக்குகளில் வெற்றி உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும்.
எதிர்பார்த்த வேலை மாற்றம் இடப்பெயர்ச்சி கிடைத்துவிடும். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மானியத்துடன் கடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். 31.3.2026 அன்று இரவு 9.33 முதல் 3.4.2026 அன்று காலை 6.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன்-மனைவிக்கிடையே நிலவிய இறுக்கமான மனநிலை நீங்கும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் நீங்கும். பங்குனி உத்திரத்தன்று பச்சைக் கற்பூரம் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
மீனம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசியில் சூரியன் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது. வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். கூட்டுக் குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு நிலவும். சிலருக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பேசி காரியம் சாதிப்பீர்கள். கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். ராசிக்கு சனி, செவ்வாய் சேர்க்கை இருப்பதால் பூர்வீகச் சொத்தால் உடன் பிறந்தவர்களுடன் மனக்குழப்பம் அதிகரிக்கும். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். 3.4.2026 அன்று காலை 6.28 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றினாலும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. திருமணம் முயற்சியை ஓரிரு வாரங்களுக்கு ஒத்தி வைப்பது நல்லது. பங்குனி உத்திரத்தன்று பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406