

சிம்மம்
மகிழ்ச்சியான வாரம். தன ஸ்தானத்திற்கு செவ்வாய், சனி, புதன் பார்வை உள்ளது. உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். தோற்றப் பொலிவு, ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.
தனவரவு மகழ்ச்சி கடலில் ஆழ்த்தும். அஷ்டமச் சனியை மீறிய நல்ல பலன் கிடைக்கத் துவங்கும்.பொருளாதார நிலையில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். உங்களின் தொழில், குடும்ப சொத்து, வராகடன் வசூல் என பல்வேறு வழிகளில் பணம் வந்து குவியும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் தேடி வரும்.
வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரி களின் ஆலோசனைகளை ஏற்று நடக்கவும். தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வீடு வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தினமும் ஆதித்ய ஹிருதயம் கேட்கவும் அல்லது படிக்கவும்.
கன்னி
புதிய தேடல்கள் பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் 4,7-ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெற்றதால் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். வேலையில் நிலவி வந்த சாதகமற்ற சூழல்கள் படிப்படியாக குறையும்.அரசு பணியில் இருந்த இழுபறிகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். கடன் பிரச்சினையை தீர்க்க உதவிகள் கிடைக்கும். மாமன் மைத்துனன் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் முடிவிற்கு வரும்.
19.4.2026 அன்று பகல் 12.31 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப விஷயங்களில் பொறு மையை கடைபிடிக்க வேண்டும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தினமும் மகாவிஷ்ணு அஷ்டோத்தரம் படிக்கவும்.
துலாம்
மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும். உங்கள் முயற்சி, எண்ணங்கள் நிறைவேறும். புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும்.உங்களின் புகழ்,
அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக அதிர்ஷ்ட பணம் பொருள் வரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும்.
திருமணம், புத்திரப் பேறு, வீடு, வாகனம் போன்ற வாழ்வியல் மாற்றம் உண்டாகும். 19.4.2026 அன்று பகல் 12.31 மணி முதல் 21.4.2026 நள்ளிரவு 1.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குடும்ப உறவுகளிடம் கசப்பை ஏற்படுத்தும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. தினமும் கருட கவசம் படிக்கவும்
விருச்சிகம்
கடந்த கால இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது.உங்கள் தனி தகுதியை, திறமையை வளர்த்துக் கொள்ளக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும்.தடைபட்ட பணிகள் துரிதமாகும்.பல தலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும்.
பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறைந்து நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உயர்வான நிலையை அடைவீர்கள். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
நாள்பட்ட வியாதிகள் மறையும். 21.4.2026 நள்ளிரவு 1.01 மணி முதல் 23.4.2026 பகல் 3.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. தினமும் கந்த குரு கவசம் கேட்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406