2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

கடந்த கால கடனை குறைக்க முயற்சிப்பீர்கள்.
2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
Published on

மேஷம்

உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும் வாரம்.ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் உச்சமடைந்து நிற்கிறார். வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். பொதுப் பணியில் உள்ளவர்களுக்கு பொதுஜன ஒத்துழைப்புகள் கிடைக்கும். செயல் திறன் கூடும். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள்.

பெரிய மனிதர்களின் நட்புகள் உற்சாகத்தை கூட்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய பதவிகள் கிடைக்கும்.நீண்ட காலமாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவுகள் கிடைக்கும். எதிர்கால சேமிப்புகள் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும்.

தந்தையின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும். ஆடம்பர பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தன வரவில் நிலவிய தடைகள் அகலும். கடந்த கால கடனை குறைக்க முயற்சிப்பீர்கள்.தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.

ரிஷபம்

மாற்றங்களால் மனம் மகிழும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். தன ஸ்தானத்தில் 8,11-ம் அதிபதி குரு என கிரக நிலவரம் மிகச் சாதகமாக உள்ளது. பணபர ஸ்தானம் வலிமையாக இயங்குவதால் அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும்.

வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சாமர்த்திய பேச்சுக்களால் காரிய சித்தி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் கூடும். வியாபாரத்தில் நிலவிய போட்டிகள், பொறா மைகள் குறையும்.தொழில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.ஆடம்பர விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.

எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைத்தாலும் மறைமுகமான விமர்சனங்கள் தோன்றும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். பணி புரியும் இடத்தில் நல்ல மாற்றமான சூழல் உண்டாகும்.ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். உற்றார் உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தினமும் லலிதா சகஸ்ரநாமம் கேட்கவும்.

மிதுனம்

திட்டமிட்டு செயல்படும் வாரம்.ராசி அதிபதி புதன் 7,10-ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுவது நீச்ச பங்க ராஜயோகமாகும்.புதிய கூட்டு தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.ராசியை 6,11-ம் அதிபதி செவ்வாய் பார்ப்பதால் உத்தி யோகத்தில் நிலவிய மன உளைச்சல் நீங்கும்.

வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான நிம்மதியான வேலை கிடைக்கும். அரசு உத்தியோக வாய்ப்பு உள்ளது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பீர்கள். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரால் உபரி லாபம் கிடைக்கும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

குரு பலத்தால் திருமணம் சிறப்பாக நடக்கும். நெருக்கடி கொடுத்தவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். முக்கிய முடிவுகளை பெரியவர்களின் ஆலோசனை கேட்டு எடுக்கவும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கவும்.

கடகம்

திட்டமிட்ட செயல்களில் சாதகமான சூழல் அமையும் வாரம்.ராசிக்கு 10-ல் தன ஸ்தான அதிபதி சூரியன் உச்சம் பெற்று உள்ளார்.வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.செயல்பாடுகளில் நிலவி வந்த ஆர்வமின்மை குறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

வீடு வாகன வசதியை மேம்படுத்தும் எண்ணங்கள் உதயமாகும்.தன வரவுகளில் இருந்த நெருக்கடி கள் குறையும். கடந்த சில மாதங்களாக அனுபவித்து வந்து கடன், எதிரி, நோய் தொல்லை, விரயம்,கூட்டுத் தொழில், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும் காலம் வந்து விட்டது. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணி நிமித்தமான சில பொறுப்புகள் அதிகரிக்கும்.

உறவினர்களுடன் சுப விசே ஷங்களில் கலந்து கொள்வீர்கள். காணாமல் போன தவறிப் போன சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் நிலவி வந்த தடைகள் அகலும்.எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தினமும் காலையில் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com