

சிம்மம்
விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ஒருவரின் எண்ணங்கள் விருப்பங்கள் லட்சியங்களை நிறைவேற்றும் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை உள்ளது. கட்டுபாடற்ற சுதந்தர சுக வாழ்க்கையை மனம் தேடும். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதால் தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தையை குரு பெயர்ச்சிக்கு முன்பு பேசி முடிப்பது நல்லது. குரு பகவான் விரய ஸ்தானத்தை நெருங்குவதால் இந்த காலகட்டத்தில் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது.
சிலருக்கு வீடு அல்லது வேலையில் மாற்றம் உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு அகலும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகினால் அவமானங்களை தவிர்க்க முடியும். 12.5.2026 அன்று இரவு 7.25 முதல் 14.5.2026 அன்று இரவு 10.34 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். நினைத்ததை செயல்படுத்த முடியாத வகையில் தடை இருக்கும். எனவே புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.
கன்னி
எண்ணங்களும் திட்டங்களும் வெற்றியடையும் வாரம். ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை உள்ளது. குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் சமயோசித புத்தியால் சீராகும். சொத்துகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். எதிர்கால திட்டங்களும் கனவுகளும் வெற்றி பெறும். புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முயற்சிகள் மனநிறைவு தரும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும். திருமண ஏற்படுகள் நல்ல முறையில் நடக்கும்.
வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சீராகும். 14.5.2026 அன்று இரவு 10.34 மணி முதல் 16.5.2026 அன்று இரவு 10.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதீத உடல் உழைப்பால், சோர்வு மிகுதியாகும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிப்போகும். புதிய முயற்சிகளை கவனத்துடன் அணுகவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. முன்னோர்களின் நல்லாசியை பெற்றுத் தரும் பித்ருக்கள் பூஜையும், குலம் காக்கும் குல தெய்வ வழிபாடும் அவசியம்.
துலாம்
தேவைகள் பூர்த்தியாகும் வாரம். ராசிக்கு 2,7-ம் அதிபதி செவ்வாயின் சமசப்தம பார்வை உள்ளது. முக்கியமான செயல்களைத் தெளிவாக செய்வதன் மூலம் வாழ்வாதாரம் உயரும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். கடன் விவகாரங்களில் அனுகூல நிலை ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.
இழந்த பதவி தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. இன்னும் சில நாட்களே ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் நன்மைகள் மேலும் கூடும். திருமண முயற்சியை துரிதப்படுத்த வேண்டும். வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும். தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை, கூட்டு முயற்சியில் வெற்றி, நட்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாரிசு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தினமும் மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
கலக்கலான வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் வெற்றிகள் குவியும். எதற்கும் அஞ்சாமல் தைரியமாக அனைத்து முயற்சியிலும் இறங்குவீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க மனைவி மூலம் பொருள் உதவி கிடைக்கும். சிலர் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட் செய்யலாம். சகோதரர் மற்றும் மனைவியுடன் இணைந்து கூட்டுத் தொழில் தொடங்கலாம். திருமணம் கைகூடும்.
எதிர்பார்த்த வீடு, வாகன, தொழில் கடன் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் தைரியம் அதிகரிக்கும். சிலருக்கு கடன், எதிரி தொல்லைகள் கூடும். கோடை விடுமுறை மற்றும் ஓய்வு நேரத்தை திட்டமிட்டு சுற்றுலா சென்று வருவதால் புத்துணர்ச்சி அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். பட்சிகளுக்கு சிறுதானியம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406