காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆனி கருட சேவை உற்சவம்

பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
Varadharaja Perumal
வரதராஜபெருமாள்
Published on

காஞ்சிபுரம், வரதராஜபெருமாள் கோவிலில் ஆனி மாத கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் வரதராஜப்பெருமாள் வெள்ளை மற்றும் பச்சை நிற பட்டு உடுத்தி பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளினார்.

பின்னர் தீபாராதனைகள் காட்டப்பட்டு கோவிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் புறப்பட்ட உற்சவர் வரதராஜப் பெருமாள் 4 மாடவீதியில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார். பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com