வந்தவாசி அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 kumbabishekam
கும்பாபிஷேகம்
Published on

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மழையூர் கிராம கூட்டு சாலையில் பால் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் கலசங்களை கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தினர். பின்னர் அந்த புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பால் முனீஸ்வரர் சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த கும்பாபிஷேகத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com