செங்காடு கிராமத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
செங்காடு கிராமத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அதிகாரப்பட்டி, செங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கல்யாண சுப்ரமணி சுவாமி இடும்பன், கடம்பன் கோவிலில் ஆலய அஷ்ட பந்தன மஹாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா கடந்த 24-ந் தேதி தொடங்கி சுவாமிக்கு தீர்த்தக்குடம், பால்க்குடம் எடுத்தல், உள்ளிட்டவைகள் நடந்தன.

அதனை தொடர்ந்து, சுவாமிகளுக்கு மங்கள இசை, கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம். உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று ஆலயத்தில் மகா கும்பா பிஷேக விழா நடைபெற்றது.

இதில் பல்வேறு புண்ணிய தளங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்களை கொண்டு கோபுர கலசத்திற்கு ஊற்றி சுவாமிகளுக்கு மஹா தீபாராதனை காட்டி கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com