Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.05.2026 - இந்த ராசிக்காரர்கள் எடுத்த முயற்சி வெற்றி கிடைக்கும் நாள்...

நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.05.2026 - இந்த ராசிக்காரர்கள் எடுத்த முயற்சி வெற்றி கிடைக்கும் நாள்...
Published on

மேஷம்

முயற்சி கைகூடும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.

ரிஷபம்

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்

விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்ற சிந்தனைகள் உருவாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.

கடகம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

சிம்மம்

கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் நாள். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

கன்னி

செவி குளிரும் செய்தி வந்து சேரும் நாள். செல்வநிலை உயரும். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்

நாட்டுப்பற்று மிக்கவர்களின் உதவி கிடைக்கும். உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

விருச்சிகம்

யோகமான நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரலாம். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

தனுசு

வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மகரம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். வருமானம் திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும்.

மீனம்

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல செய்தியுண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com