திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் இன்று ஆடித்திருவிழா கொடியேற்றம்

1-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் வாகனத்தில் பவனிவருதல் நடக்கிறது.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் இன்று ஆடித்திருவிழா கொடியேற்றம்
Published on

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 11நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை அய்யாவழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் கொடியேற்றுகிறார். தொடர்ந்து 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனிவருதல், காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சி படிப்பு, பணிவிடை, பகல் 1 மணிக்கு அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை 5 மணிக்கு புஷ்ப வாகன பவனியும் மாலை 6 மணிக்கு அன்ன தர்மம் வழங்குதல் நடக்கிறது.

இரண்டாம் திருவிழாவான 23-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 10ம் திருவிழா 31-ந் தேதி வரை காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, மாலை 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை மதியம் 1 மணிக்கும், மாலை 6 மணிக்கும் அன்னதர்மம் நடக்கிறது. மாலை 4மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 11-ம் திருவிழாவான, 1-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.05மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், காலை 9 மணிக்கு அன்ன தர்மம் நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பகல் 2 மணிக்கும் இரவு 8 மணிக்கும் அன்ன தர்மம், இனிமம் வழங்குதல் நடக்கிறது. நள்ளிரவு 1மணிக்கு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பவனி வருதல் இரவு 2 மணிக்கு தர்மம், இனிமம் வழங்குதல் நடக்கிறது.

விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருடன், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திர ஆகிய வாகனத்தில் பவனிவருதல் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com