திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

3 குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.அஸ்திரதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
Published on

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் சந்திர, சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி 3 குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.

3 குளங்களில் எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குளங்களில் புனித நீராடி வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பேஸ்கர் திருஞானம், மேலாளர் சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com