

சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை மிக உகந்த தினமாகும். சந்திரனுக்கு சோமன் என்ற பெயரும் உள்ளதால் திங்கட்கிழமை சோமவாரம் என்று அழைக்கப்படுவது உண்டு. சோமவார விரதத்தை கடைபிடித்து தான், சிவ பெருமானின் தலையில் நிரந்தரமாக இருக்கும் பாக்கியத்தை பெற்றார் சந்திர பகவான்.
சோமவார விரதத்தை சந்திர பகவானே முதன் முதலில் அனுஷ்டித்ததாகவும், அதனாலேயே இதற்கு சோமவார விரதம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது சோமவார விரதம் எனப்படுகிறது. சிவபெருமானுக்குரிய விரதங்களில் சோமவார விரதம் மிக சிறப்புடையது. சோமன் என்பதற்கு பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்ற பொருளும் உண்டு.
எனவே, சோமவார விரதத்தை கடைபிடித்தால் திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். கணவரின் ஆயுள் பலம் அதிகரிக்க இவ்விரதம் மிகச்சிறந்தது.