சோலைமலை முருகன் கோவிலில் சஷ்டி பூஜை

சோலைமலை முருகன் கோவிலில் உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், சர விளக்கு தீபாராதனைகள், அலங்காரம், பூஜைகள் நடந்தன.
சோலைமலை முருகன் கோவில்
சோலைமலை முருகன் கோவில்
Published on

அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப் பெருமானின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவில். இந்த கோவிலில் கார்த்திகை மாத சஷ்டிபூஜைகள் நடந்தன.

இதில் அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், வில்வ இலை உள்பட 16 வகையான அபிஷேகங்கள், சர விளக்கு தீபாராதனைகள், அலங்காரம், பூஜைகள் நடந்தன.

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுவாமிக்கும், வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதியிலும் விசேஷ பூஜைகள் நடந்தன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com