நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது

24-ந்தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறதுஜனவரி 2-ம்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடக்கிறது.3-ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.
பாய்மரங்கள் ஏற்றப்பட்டதையும், அதில் கலந்து கொண்ட இஸ்ஸாமியர்களையும் படத்தில் காணலாம்.
பாய்மரங்கள் ஏற்றப்பட்டதையும், அதில் கலந்து கொண்ட இஸ்ஸாமியர்களையும் படத்தில் காணலாம்.
Published on

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடை பெறுவது வழக்கம்.

அதன்படி வருகிற 24-ந்தேதி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை ஆண்டவர் தர்காவில் பரம்பரை கலிபா தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.

அப்போது, கூடியிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் கற்கண்டு மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 24ம் தேதி கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 3-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com