கிருஷ்ணகிரி முல்லை நகர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கிருஷ்ணகிரி முல்லை நகர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி முல்லை நகரில் உள்ள ஊர் மாரியம்மன், மங்கள விநாயகர், பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 23-ந் தேதி மகா கணபதி ஹோமம், மஹா சங்கல்பம், கணபதி ஹோமம், மஞ்சள் இடித்து பச்சை பந்தல் அமைத்தல், காப்பு கட்டுதல், கொடி ஏற்றுதல் ஆகியவை நடந்தது.

நேற்று முன்தினம் மாலை கோ பூஜை, யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூஜை ஆகியவை நடந்தது. நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், சாமிக்கு கண் திறப்பு, கடம் புறப்பாடு ஆகியவையும், 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் ஊர்மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com