கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.2000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
Published on

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

இதையொட்டி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் இருந்து குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில்நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, சன்னதி தெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

அங்கு 5 மணிக்கு பஜனை, அதைத்தொடர்ந்து பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com