கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் 5-ந்தேதி பவுர்ணமி கிரிவலத் திருவிழா

5-ந்தேதி பவுர்ணமி வருகிறது.பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் 5-ந்தேதி பவுர்ணமி கிரிவலத் திருவிழா
Published on

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வருகிற 5-ந்தேதி பவுர்ணமி கிரிவலத்திருவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு அன்று மாலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் திரளான பக்தர்கள் தீப விளக்கு ஏற்றி மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

பின்னர் பக்தர்கள் கோவிலை வந்தடைந்த உடன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com