காளிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராகு கால வழிபாடு

வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
kalika parameshwari
காளிகா பரமேஸ்வரி
Published on: 

தஞ்சாவூர் தெற்குவீதி காளிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ராகு காலத்தில் காளியம்மன் என்கிற காளிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

இன்றைய தினம் பக்தர்களுக்காக காளிகா பரமேஸ்வரி அம்மன் பாதத்தில் கொலுசுகள் அணிந்து காட்சி அளித்தார். தஞ்சாவூர் பெரிய கோயிலில் கட்டிய தலைமை சிற்பிக்காக ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டினார் என்கிறது தல புராணம்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிரதி பௌர்ணமி தோறும் வலம் வரும் பக்தர்கள் இத்தலத்தில் உள்ள அம்மனை வழிபட்டு சென்றால் பெருவுடையார் அனுக்ரஹம் முழுமை பெறும் என்பது ஐதீகம். இன்றைய வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com