

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜெனகை மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து அம்பாளின் முன்பாக பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து ஜெனகை மாரிமம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உபயதாரர் பரிமளா செந்தில் நாராயணன் மூர்த்தி கண்ணன் குடும்பத்தார்கள் செய்திருந்தனர்.