முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் அமாவாசை விரத மகிமை

காலை, மாலை இருவேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் அமாவாசை விரத மகிமை
Published on

ஒவ்வொரு அமாவாசைக்கும் பிரபஞ்சம் முழுவதும் விசேஷமான சக்திகள் நிறைந்து காணப்படும் என்பார்கள். அமாவாசை போல பவுர்ணமியிலும் பிரபஞ்ச சக்தி அதிகரித்து காணப்படும். அமாவாசையில் வழிபடும் வழிபாட்டு முறைகள் விசேஷமான பலன்களை கொடுக்கின்றன.

அமாவாசை நாளில் குலதெய்வ பூஜை செய்யலாம். அமாவாசையில் உணவேதும் உண்ணாமல் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அமாவாசை விரதம் இருக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும்.

இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும். வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இருவேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

குறிப்பாக அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை ஒளியின் போது புலால் உணவு உண்ணும் பொழுது உடம்பில் ஒருவித அசவுகரியம் உண்டாகும்.

இது அறிவியல் ரீதியாகவும் உண்மை என்பதால் அமாவாசை தினத்தில் அசைவ உணவு உண்ணாமல் இருப்பது நல்லது. மேலும் அதில் பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்த சைவ உணவையும் தவிர்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சாப்பிட கூடாத பொருட்கள் இது ஆகும்.

வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அன்றைய நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிப்பதும் அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும்.

உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும். பொன், பொருள் சேர குலதெய்வ அருள் பெறவும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

ஒரு மண்பானையில் அல்லது செம்பு, பித்தளை கலசத்தில் தண்ணீரை வைத்து பூஜை அறையில் வையுங்கள். அதில் குலதெய்வத்தை நினைத்து ஆவாகனம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்வது குலதெய்வ வழிபாட்டை நிறைவு செய்கிறது. உங்களால் முடிந்தால் நைவேத்தியம் வைத்து வழிபடவும், அப்படி இல்லை என்றால் சிறிதளவு கற்கண்டு வைத்து வழிபடுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com