அட்சய திருதியையில் உருவாகும் ராஜ யோகம்

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி.
அட்சய திருதியையில் உருவாகும் ராஜ யோகம்
Published on

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க் கையிலும், பூமியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதுமட்டுமின்றி, சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ, நிலைகளின் மூலமோ சுப அல்லது ராஜயோகங்களை உருவாக்கி, இன்னும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ஏப்ரல் 19-ந் தேதி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைய உள்ளார்.

இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி. மேலும் இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். அட்சய திருதியை நாளில் சுக்கிரன் தனது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, மங்களகரமான கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்க உள்ளார்.

இந்த யோகமானது முன்னேற்றம், நிதி ஆதாயம், சுகபோகங்கள் மற்றும் சமூக மரியாதையைக் கொண்டு வரக்கூடியது.

பொதுவாக இந்த ராஜயோகம் உருவாகும் போது, ஜாதகத்தில் கேந்திர (1, 4, 7, 10) மற்றும் திரிகோண (1, 5, 9) வீடுகளின் அதிபதி கிரகங்கள் ஒரு உறவை உருவாக்குகின்றன. இந்த சுப யோகம் வாழ்வில் வெற்றியையும், புகழையும், முன்னேற்றத்தையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com