அட்சய திருதியை அன்று திறக்கப்படும் கோவில்

இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானதாக விளங்குகிறது இந்தக் கோவில்.
அட்சய திருதியை அன்று திறக்கப்படும் கோவில்
Published on

உத்தரகாண்ட் மாநிலத்தில், மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கேதர்நாத் கோவில் அட்சய திருதியை முதல் அக்டோபர் மாதம் தீபாவளி வரை மட்டுமே திறந்திருக்கும். இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானதாக விளங்குகிறது இந்தக் கோவில்.

குளிர்காலத்தில் கேதார்நாத் கோவில் 6 மாதங்கள் மூடப்பட்டிருக்கும் போது, தெய்வத்தின் சிலை உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஓம்காரேஷ்வர் கோவிலில் 6 மாதங்கள் வழிபடப்படுகிறது.

கேதார்நாத் கோவிலில் உள்ள சிவலிங்கம் முக்கோண வடிவத்தில் உள்ளது. இது சிவாலயங்களில் தனித்துவமாக அமைகிறது. இது கோவிலின் கருவறைக்குள் அமைந்துள்ளது. கேதார்நாத் கோவிலில் பார்வதி, கிருஷ்ணர், பஞ்ச பாண்டவர்கள் மற்றும் அவர்களின் மனைவி திரவுபதி, நந்தி மற்றும் வீரபத்ரர் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோவிலைச் சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கவுரிகுண்டம் என்னுமிடத்தில் இருந்து 14 கி.மீ தொலைவு மலை ஏறியே இக்கோவிலுக்குச் செல்ல முடியும்.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலின் கருவறை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகில் உள்ள சிம்மாசல நரசிம்ம சுவாமியின் திருமுக தரிசனம் அட்சய திருதியை தினத்தன்று நடைபெறும். மற்றபடி வருடம் முழுக்க திருமுகத்தில் சந்தன காப்புதான் சாற்றி இருப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com