கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு வடை சுட்ட பக்தர்

மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு வடை சுட்ட பக்தர்
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரப்பன் கொட்டாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதிகாலை முதலே மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி, சக்தி கரகம் எடுத்து வந்து வழிபட்டனர்.

மேலும் கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு வடை சுட்டு எடுத்து பக்தர் ஒருவர் நேர்த்திகடன் செலுத்தினார். இதில் வீரப்பன் கொட்டாய், புதுக்காடு, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர்க்கவுண்டர், கோவில் நிர்வாகிகள், பூசாரி மற்றும் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com