

தனுசு ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே மாதத் தொடக்கம் மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆயினும் மே 25-ந் தேதி கடக ராசிக்கு குரு பகவான் வரப்போகிறார். எனவே அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைக்கப்போவதால் ஆரோக்கிய தொல்லை, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். விரயங்கள் கூடும். நட்பு பகையாகும். உறவினர்கள் மூலம் மனவருத்தம் தரும் தகவல் வரலாம், மாதத்தின் பிற்பாதியில் கவனமாக செயல்படுவது நல்லது. வியாழக்கிழமைதோறும் விரதம் இருந்து குரு பகவானை தொடர்ந்து வழிபட்டு வருவது நன்மை தரும்.
மிதுன-சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், அங்குள்ள குருவோடு இணைந்து சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். பக்கத்தில் உள்ளவர்கள் பகையாளர், சிக்கல்களும், சோதனைகளும் வரக்கூடிய நேரமிது. எதையும் சிந்தித்து செய்வது நல்லது. சுயஜாதக அடிப்படையில் திசாபுத்தி பலம் அறிந்து தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் ஓரளவேனும் நன்மைகள் காண இயலும். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம்.
மிதுன-புதன்
வைகாரி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்நேரம் மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பயணங்கள் பலன் தரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும் வீட்டிற்குத் தேவையான விலை உயர்த்த மின்சாதனப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் பழைய பங்குதாரர்களை நீக்கிவிட்டு, புதிய பங்குதாரர்கள் வந்து இணையும் வாய்ப்பு உண்டு.
கடகம் சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2036) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் இந்நேரம் அற்புதமான நேரமாகும். திட்டமிடாமலேயே சில காரியங்கள் வெற்றி பெறும். சேமிப்பு அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறுவதில் எந்த தடையும் இருக்காது. பொருளாதார பற்றாக்குறை அகலும், அரசுவழி வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. கலைஞர்களுக்கு எதிலும் தேக்க நிலை ஏற்படும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். புதிய முயற்சிகளில் தாமதம் நிலவும்.
இம்மாதம் ஆதியந்த பிரபு வழிபாடு ஆனந்தம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிபச்சை.
மகர ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனி விலகிவிட்டது. எனவே இம்மாதம் பொருளாதார நிலை திருப்தி தரும் புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். வரன்கள் வாசல் தேடி வரும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மக்கட்செல்வாக்கு அதிகரிக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு, குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் மாதத்தின் பிற்பகுதி வளர்ச்சி கூடும். வருமானம் அதிகரிக்கும்.
மிதுன-சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 10-க்கு அதிபதி 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்நேரத்தில் தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கு மேல் சம்பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்த தடை அகலும்.
மிதுன-புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6.9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி 6-ம் இடத்திலேயே சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் எதிரிகளின் பலம் குறையும் லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனங்கண்டு கொள்வீர்கள். தொழிலில் உள்ள பணியாளர்களை திடீரென மாற்றும் சூழ்நிலை உருவாகும். உடல்தலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. கை வலி, கால் வலி ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உருவாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பு தராத மேலதிகாரிகள் திடீரென மாற்றப்படலாம்.
கடக-சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2006) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு குருவும், சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானாதிபதி குருவும், தொழில் ஸ்தானாதிபதி சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் பல நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும். புகழ் பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைகூடி வரும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் சூழ்நிலை உண்டு. வருமாளம் உயரும்.
இம்மாதம் வராஹி வழிபாடு வளர்ச்சியை கூட்டும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
கும்ப ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி. தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தொடக்கம் சிறப்பாகவே இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். மே 30-ந் தேதிக்கு பிறகு, குரு 6-ம் இடத்திற்கு வருகிறார். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிக்கும் இடத்திற்கு குரு வருவதால் மாதத்தின் பிற்பகுதியில் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்கள் இடமாற்றங்கள் உண்டு.
மிதுன-சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிலுவ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும். பெற்றோர்வழி ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் மேன்மை உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பாகப் பிரிவினைக்கு இதுவரை ஒத்துவராத சகோதரர்கள் இப்பொழுது ஒத்துவருவர். உத்தியோகத்தை பொறுத்தவரை மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு உண்டு.
மிதுன-புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன், எனவே பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம், பூர்வ புண்ணியந்தின் பயனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் கிடைக்கும். குறிப்பாக பிள்ளைகள் படித்து முடித்து வேலையில்லாமல் இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழிலில் சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் வந்துசேரும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும் நேரமிது. வாடகை கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
கடக-சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இக்காலத்தில் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களைன வாங்கி மகிழ்வீர்கள். இடம், வீடு வாங்குவதற்கான ஏற்பாடு செய்யும் நேரமிது. பெற்றோர்களின் ஆதரவோடு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள், 'வாங்கியதை கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முயவில்லையே' என்ற கவலை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகளும், கூடுதல் சம்பளமும் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த மாற்றினத்தவர் கைகொடுத்து உதவுவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியை கூட்டும். மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.
மீன ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் ஆரோக்கியத் தொல்லை, அதிக விரயங்கள். தொழியில் குறுக்கீடுகள் போன்றவை ஏற்படலாம். எனினும் மே 26-ல் குரு கடக ராசிக்கு செல்லும்போது, அவரது பார்வை உங்கள் ராசியின் மீது பதிவதால் மாதத்தின் பிற்பாதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும் பொருளாதாரம் கைகொடுக்கும். புதிய வாய்ப்புகள் வருவதை ஏற்றுக்கொள்வீர்கள்.
மிதுன-சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அச்சுறுத்தல்கள் ஏற்படும். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. ஒருசிலரை நம்பி செய்த காரியங்கள் நடைபெறாமல் போகலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கியும் திருப்தி ஏற்படாது. வியாபாரத்தில் பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும். பணப் பற்றாக்குறையின் காரணமாக பிறரிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாரும்.
மிதுன-புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஓரளவு நன்மைகள் கிடைக்கும். இடம், வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் யோகமும் உண்டு. தொழிலை விரிவுசெய்ய எடுத்த முயற்சியில் தடைகள் வரலாம். தற்காலிக பணியில் இருப்பவர்கள் நிரந்தர பணியில் அமரும் வாய்ப்பு உண்டு.
கடக-சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2006) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அஷ்டமாதிபதி 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது. பிள்ளைகளால் தொல்லைகளும், பிரச்சினைகளும் ஏற்படும் ஒருசிலருக்கு பூர்வீக இடத்தையோ, வாங்கிய இடத்தையோ விற்கும் சூழ்நிலை உருவாகலாம். வேலைப்பளு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி காரணமாக அதிலிருந்து விலகிக் கொள்ளலாமா என்று நினைப்பீர்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடப்பது சந்தேகம்தான். வழிபாடு வளர்ச்சியை கூட்டும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நெருங்கிய பிரமுகர்களின் நட்பால் நன்மை கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு இடம், பூமி சேர்க்கை உண்டு போதுமான வருமானம் கிடைக்கும்.
இம்மாதம் முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்: பொன்னிற மஞ்சள்.