

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாள் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
கோடை விடுமுறை தொடங்கியது முதல் தினமும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று இரவு முதல் தரிசன வரிசையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள சீலா தோரணம் வரை வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதியில் நேற்று 78,389 பேர் தரிசனம் செய்தனர். 45,783 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.07 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டன. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் 3 இடங்களில் கூடுதலாக அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி முறையாக தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.