

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி சீரான தரிசனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
வைகுண்டம் மற்றும் நாராயணகிரி அறைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இதனால் பக்தர்கள் ஸ்ரீ வாரி சேவாசதன் கட்டிடம் முதல் சீலா தோரணம் வரை 3 கிலோ மீட்டருக்கு வரிசையில் தரிசனத்திற்காக காத்து கிடக்கின்றனர். அறைகள் கிடைக்காததால் திறந்த வெளியில் பக்தர்கள் தங்கி உள்ளனர்.
திருப்பதியில் நேற்று 87,689 பேர் தரிசனம் செய்தனர். 44,476 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.29 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் 42 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு நீர், மோர், பால், உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.