நட்சத்திர நாட்களில் வழிபாடும் பலனும்

வீட்டில் வில்வ செடி வளர்த்தால் தொழில் மிகுந்த வளர்ச்சி உண்டாகும்.
நட்சத்திர நாட்களில் வழிபாடும் பலனும்
Published on

* ஆட்சீஸ்வரர் கோவிலில் கோளறு பதிகம் பாடினால் அனைத்து நவகிரக தோஷங்களும் விலகும்.

* புனர்பூசம் நட்சத்திர நாளில் பிள்ளை வரம் வேண்டி சரக்கொன்றை மரத்தில் மஞ்சள் பட்டில் தொட்டில் கட்டி வழிபட்டால் பிள்ளை வரம் கிடைக்கும்.

* அனுஷ நட்சத்திர நாளில் சங்கு தீர்த்தத்தில் நீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து அந்த நீரைப்பருகி குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் எப்பேர்ப்பட்ட நோயும் குணமடையும். தோல் வியாதி இருந்தாலும் சரியாகும் என்கின்றனர் பக்தர்கள்.

* கிருத்திகை நட்சத்திர நாளில் சிம்ம தீர்த்தத்தில் நீர் எடுத்து அதில் பன்னீரும் குங்குமமும் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை சொத்து பிரச்சினை உள்ள இடத்தில் தெளித்தால் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் உண்டாகும்.

* பூர நட்சத்திர நாளில் கோயில் அருகில் தொட்டாச் சிணுங்கிச் செடி நடவு செய்து சுவாமியை தரிசனம் செய்தால் திருமண தோஷம் விலகி சுபகாரியங்கள் வீட்டில் நடந்தேறும்.

* சூரியன் - சனி சேர்க்கை பார்வை உள்ளவர்கள் உத்திரம் அல்லது அனுஷ நட்சத்திர நாளில் மாம்பழ சாறில் அபிஷேகம் செய்து அதனை அங்கு வருபவர்களுக்கு கொடுத்தால் பாதிப்புகள் குறையும்.

* மகா வில்வச்செடியை திருத்தலத்தில் நட்டு சுவாமியை தரிசனம் செய்தால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். மேலும், வீட்டில் வில்வ செடி வளர்த்தால் தொழில் மிகுந்த வளர்ச்சி உண்டாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com