வில்வத்தில் அதிர்வை உணரலாம்

அந்த சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. அந்த அதிர்வு உங்கள் உடல், மனம், ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்
வில்வத்தில் அதிர்வை உணரலாம்
Published on

வில்வத்தில் அதிர்வை உணரலாம்

சிவாலயங்களில் உள்ள லிங்கத்தில் இருந்து, இந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள சக்தி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அந்த சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இதனால்தான் பழமை சிறப்புமிக்க ஆலயங்களுக்குள் நாம் செல்லும் போது அதிர்வை உணர முடியும்.

சிவன் உறைந்துள்ள லிங்கம் மீது நாம் வில்வ இலைகளைப்போட்டு பூஜை செய்யும்போது,

லிங்கத்தில் இருந்து வெளியாகும் அதிர்வு வில்வ இலைகள் மீது பதியும்.

இதையடுத்து அந்த அதிர்வுகளை வில்வ இலைகள் முழுமையாக ஈர்த்து தக்க வைத்துக் கொள்ளும்.

அந்த ஆற்றல் வில்வ இலைகளுக்கு இருக்கிறது.

லிங்கமூர்த்தி மீது வைத்து எடுக்கப்படும் வில்வ இலைகளை, நீங்கள் அர்ச்சகரிடம் இருந்து கையில் வாங்கியதுமே, அந்த அதிர்வை உணர்வீர்கள்.

அந்த அதிர்வு உங்கள் உடல், மனம், ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் மகிமை கொண்டது.

இதனால்தான் வில்வ இலையை புனிதமாக கருதுகிறார்கள்.

அடுத்தத் தடவை சிவனை வழிபட்டு முடிந்ததும், மறக்காமல் வில்வ இலையை கேட்டுப் பெறுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com