திருமண தடை நீக்கும் மருதமலை முருகன்

கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.அமெரிக்கா, மலேசியா, நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
திருமண தடை நீக்கும் மருதமலை முருகன்
Published on

முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற தலங்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்றாகும்.

இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள்.

முருகனை மனமுறுகி வேண்டினால் வேண்டும் வரத்தை தந்தருளுவார் என்பதால் தமிழகம் மட்டுமின்றி

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் திருமணத் தடை ஏற்படுவோர் இக்கோவிலில் சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் வைத்து

கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

குழந்தை இல்லாத தம்பதியினர் 5 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தாலும்

சஷ்டி தோறும் விரதம் இருந்து மருதாசல மூர்த்தியை வழிபட்டாலும் நிச்சயம் முருகனின் அருள் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டு இருந்து வரும் ஐதீகமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com