முனிவரின் சாபம் நீக்கி முக்தி அளித்த ஈஸ்வரன்

தன் தவறுக்காக மிக வருந்திய மங்கணர், தூமப்பரைப் பணிந்து மன்னித்து வேண்டினார்.
முனிவரின் சாபம் நீக்கி முக்தி அளித்த ஈஸ்வரன்
Published on

புட்கரம் என்ற தலத்திலே மங்கண முனிவர் என்பவர், பிறவிப் பெருநோய் நீங்கிப் பேரானந்த வாழ்வு பெறும் எண்ணத்தவராய் அரிய தவம் மேற்கொண்டார். ஒருநாள்சிவபூஜை செய்வதற்காகப் பத்திர புஷ்பம் சேகரிக்கச் சென்றபோது உடலில் முட்கள் கிழித்தன.

கிழித்த இடத்தில் தீயநாற்றமுள்ள செந்நீர் ஒழுகாமல், நறுமணத்தோடு நீர்வெளிவந்தது.‘இங்ஙனம் நேர்ந்தது என் தவத்தால்” என்று அறிந்து பேருவகை கொண்டார், காடெல்லாம் குதித்துத்திரிந்தார்.

அப்போது அக்காட்டில் தவம் செய்துகொண்டிருந்த தூமப்பர் என்பவர் மீது மங்கணர் கால்பட்டது. அதனால் கோபம் கொண்ட தூமப்பர் “நீ முயல் போல்பாய்ந்து குதித்தமையால் முயல் ஆகுக!. என் மீது பட்ட கால்முடக்கு கால் ஆகித் திரிக! ” என்று சாபமிட்டார்.

தன் தவறுக்காக மிக வருந்திய மங்கணர், தூமப்பரைப் பணிந்து மன்னித்து வேண்டினார். அவர் திருப்பாதிரிப்புலியூரை பற்றியும் பாடல நாதனைப்பற்றியும் கூறி, அங்கு சென்று இறைவனை வழிபட்டுசாப நீக்கம் பெறுக! என்றார்.

மங்கண முனிவர், முடக்கால் முயலாகிப் பற்பலஇடங்களில் பற்பல ஆண்டுகள் வருந்தித் திரிந்து, இறுதியில்பாடல வனத்தை அடைந்தார். அன்று கார்த்திகைச்சோமவாரம் திங்கட்கிழமை.

ஆதலால் தொண்டர்கள்தோரண விளக்கிட்டு வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள்.

முன்னை நற்பேறு வந்துற்ற காரணத்தால் சிவகர தீர்த்தம் முதலிய தீர்த்தங்களில் நீராடிச் சிவபரம்பொருளைத் தரிசித்து அவ்வனத்திலேயே தங்கியிருந்தார்.

ஒரு நாள்நாய் துரத்த, அச்சங்கொண்ட முடக்கால் முயல் பாதிரிமரத்தின் அடித்தூறு தன் மீது தாக்குமாறு ஓடியது. மரத்தின்தொடர்பு நிகழ்ந்தவுடன் சாபம் நீங்கி முனிவர் உருவம் பெற்ற மங்கணமுனிவர் பாடலநாதனைப் பூஜித்து முக்தி பேறு பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com