அளவில்லாத பலன்களை தரும் தல விருட்ச பிரதட்சணம்

ஆலயங்களில் பிரதட்சணம் செய்வதில் அந்தந்த சந்நதிக்கு ஏற்ப விதிமுறைகள் உள்ளன.
அளவில்லாத பலன்களை தரும் தல விருட்ச பிரதட்சணம்
Published on

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடக்கும் “தலவிருட்ச பிரதட்சணம்” மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள தல விருட்சத்தை 1008 தடவை சுற்றுவதாக வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த பிரதட்சணம் கார்த்திகை மாதம் நடைபெறும். பக்தர்கள் கார்த்திகை 1-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 1008 பிரதட்சணத்தை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த பிரதட்சணம் நடைபெறும்.

கார்த்திகை மாத 31 நாட்களுக்குள் 1008 சுற்றுகளையும் பக்தர்கள் முடித்து விடுவார்கள். இந்த வழிபாடு மிகவும் புகழ் பெற்றுள்ளது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் சோமவாரத்தில் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.

ஆலயங்களில் பிரதட்சணம் செய்வதில் அந்தந்த சந்நதிக்கு ஏற்ப விதிமுறைகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டு பிரதட்சணம் பெற முடியும்.

அந்த வகையில் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடக்கும் “தலவிருட்ச பிரதட்சணம் அளவில்லாத பலன்களை அள்ளித்தரும் என்பது பக்தர்களீன் நம்பிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com