மலைக்குள் இயங்கும் மர்ம உலகம்

இங்கே சஞ்சீவி மற்றும் இரும்பைப் பொன்னாக்கும் ரசமாக்கும் மூலிகை இருக்கலாம்.ஆனால் அவை எல்லாம் போதிய மனப்பக்குவம் உள்ளவருக்கே காணக்கிடைப்பதாகும்.
மலைக்குள் இயங்கும் மர்ம உலகம்
Published on

இரும்பை தங்கமாக்கும் மூலிகை

அண்ணாமலைச் சாரலில் எண்ணற்ற மூலிகைச் செடிகள் செழித்து வளர்கின்றன.

மனிதனின் அத்தனை பிணிகளுக்கும் அவை அருமருந்தாய் அமையும்.

இங்கே சஞ்சீவி மூலிகை இருக்கலாம். இரும்பைப் பொன்னாக்கும் ரசமாக்கும் மூலிகை இருக்கலாம்.

ஆனால் அவை எல்லாம் போதிய மனப்பக்குவம் உள்ளவருக்கே காணக்கிடைப்பதாகும்.

கிரிவலம் வரும்போது நாம் மூலிகைக் காற்றை சுவாசிக்க முடியும்.

அது நம் உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மலைக்குள் இயங்கும் மர்ம உலகம்

அண்ணாமலை முழுவதும் கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரும்மலோகம் உள்ளதென்பது ஐதீகம்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலையில் ஒரு இரவு முழுவதும் தியானித்திருந்த சுஜாதாசென் என்கிற ஆங்கிலேய பெண்,

மலைக்குள் ஒரு பெரிய உலகத்தையே தாம் கண்டதாகக் கூறி இருக்கிறார்.

அப்போது இதனை யாரும் நம்பவில்லை.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவருக்கு பல அற்புதக் காட்சிகள் காணக் கிடைத்தன.

அவர் தாம் கண்டதாகக் கூறிய பலவும் ஆங்கில அம்மையார் கண்டவற்றை ஒத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com